சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்து,ஐங்குறுநூறு ஆகிய இரண்டிலிருந்தும் விளக்கவியல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பதிற்றுப்பத்துச் செரவேந்தரைப் பற்றிய சிறு வரலாற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அடுத்துப் பதிற்றுப்பத்தில் காணத்தக்க சேரநாட்டுப் புவியியல் சார்ந்த ஆற்றல்கள் விரிவாக விளக்கப்படுகின்றன.
இதனைத்தொடர்ந்து சேரரின் யானைப் படைச் சிறப்பு, எயில்களின் அணிவகுப்பு, வீரர்கள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன, சேரவந்தரின் போர்க்களச் சடங்குகளும் அவர்கள் போற்றிய வைதீக தருமங்களும் முதல் இயலில் ஆராயப்பட்டுள்ளன.
இயல் இரண்டில் ஐங்குறுநூறு குறித்த சில அவதானிப்புகள் விளக்கப்படுகின்றன. குறுந்தொகை-நற்றிணை-அகநானூறு தொகுப்பில் காணப்படும் அகமரபுகளின் தொடர்ச்சியும் மாற்றமும் ஐந்து திணைகளில் விளக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Be the first to rate this book.