ஒத்தபதிற்றுப்பத்து' எனச் சிறப்பிக்கப்படும் எட்டுத்தொகை நூல் பண்டைத்தமிழரின் பண்பாட்டையும் வரலாற்றையும் புலப்படுத்தும் தலைச்சிறந்த இலக்கியமாகும். இந்நூல் சங்ககால சேர மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட புறப்பொருள் இலக்கியமெனாறாலும் தமிழ்நிலத்திற்கே பொதுவான இயற்கைக் கூறுகளையும் தமிழ் மக்களின் அகப்புற வாழ்க்கையையும் உள்ளடக்கியதாகும். பல்வேறு கண்ணோட்டங்களில் ஆராயப்படுவதற்குரிய அரியபல செய்திகள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன. தமிழர்களின் அரியபொக்கிஷம் இது என்றால் மிகையாகாது. பதிற்றுப்பத்தின் பாடல்களுக்குள் செல்லும் முன் சில முக்கிய குறிப்புகளை நாம் அறிந்துக் கொள்வோம், இது பத்து சேர அரசர்கள் பற்றி பத்துப் புலவர்களால் பாடியதாக அறியப்படுகிறது. இதைத் தொகுத்தவர் பெயரோ தொகுப்பித்தவர் பெயரோ அறிய முடியவில்லை. எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் பற்றியவை. இரண்டு சேரர் பரம்பரையைச் சேர்ந்த 10 சேர அரசர்களைப் பற்றி பத்துப்பாடல்களைக் கொண்ட பத்துத் தொகுதிகளைக் கொண்டது.
Be the first to rate this book.