பதினெண் சித்தர்கள் யார், யார் என்பதில், பெயர்ப்பட்டியலில், அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. சித்தர்கள் மரபில் முதலாமவர் அகத்தியரா, நந்திதேவரா? வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா? இப்படி அநேக சர்ச்சைகள். நமக்கு சர்ச்சைகள் தேவை இல்லை, சித்தர்களின் சாதனைகள் தாம் முக்கியம். யோகமும், ஞானமும் சமய எல்லை கடந்தவை. சித்தர்களோ, யோக, ஞான எல்லைகளும் கடந்தவர்கள். சித்தர் வழி தனிவழி! 'யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என்ற உயரிய நோக்கு அவர்களுடையது. சித்தர்களின் விடா முயற்சியும், உழைப்பும், தன்னலமற்ற பணியும் நமக்கு இருந்தால்... நாம் எங்கோ போய் விடலாம்!
Be the first to rate this book.