பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது:
"நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு"
இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை என்றும் கொள்ளப்பட்டது.
இவைகளில் சுமார் 3264 செய்யுட்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நூலையும் பற்றி ஒரு சிறுகுறிப்பும், ஒவ்வொரு நூலில் இருந்தும் 10 பாடல்களும் உரையுடன் இதில் தரப்பட்டுள்ளன. இவ்வரிய நூலைப் பற்றி அறிய இது ஒரு வழிகாட்டியாகும்.
Be the first to rate this book.