இனம்புரியாத சந்தோஷத்தையும், வாழ்க்கை குறித்த பயம் கலந்த எதிர்பார்ப்பையும் நம்முள் விதைக்க கூடியது. அதில் கேலி ,கிண்டல், அரட்டை, இன்பம் ,துன்பம் ,காதல், கோபம், வெறுப்பு, பிரிவு, சண்டை என பன்முக தன்மைகள் யாவும் கலந்தே பயணிக்கும். இவற்றையெல்லாம் படம்பிடித்து காட்டும் பல்வேறு இலக்கியங்களும் , திரைப்படங்களும் அவ்வப்போது பிறந்து “முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா” என பாடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ,உலகம் பேச மறந்த அல்லது பேச தேவையற்றதாக கருதும் இன்னொரு உலகம் மாணவர்களின் இதயத் துடிப்போடு கலந்து கல்வி வளாகங்களில் என்றும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது கல்வி வளாக அரசியல் என்று சொல்வது பொய்யாகாது. அப்படி ஒரு கல்லூரியான மலையூர் அரசு கல்லூரியின் கல்வி வளாக அரசியலை இலக்கிய பாணியில் வாசிப்போர் வசப்படும் வகையில் படைத்துள்ளார் செழியன் கோ.
Be the first to rate this book.