நிறைவேறாத கனவுகளின் வாழ்க்கை களம் பதேர் பாஞ்சாலி. கதையில் வரும் ஒவ்வொருவரும் மனதில் தங்கிச் செல்கின்றனர். ஹரிஹரனின் நாடோடித்தனத்திலும், சர்வஜயாவின் ஆசைகளிலும், துர்க்காவின் திருட்டுத்தனத்திலும், அப்புவின் குழந்தைத்தனத்திலும் வாழ்ந்து வெளிவருவது மனதை பிணக்கூராய்வு செய்ததாய் உணரச்செய்கிறது. துர்க்காவின் மரணம் என் பாலைவனக் கண்களில் கண்ணீராய் ஊற்றெடுக்கிறது. ஏழ்மை - வாழ்க்கையை நிந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் ஏதோ ஒன்றை பறித்துச் செல்லும் நிமிடங்கள் கொடூரமானவை. ஒவ்வொரு பக்கங்களை கடக்கும் போதும் சர்வஜயாவின் ஆசைகள் நிறைவேறுமா என்றெண்ணி நிராசைகளை மட்டுமே பரிசாக பெறமுடிகிறது. அப்புவின் விசித்திரமான உலகிற்குள் ஊடுறுவிச் செல்வதில் மனம் வெகுவாக ஆசை கொள்கிறது. அவனை உதாசீனப்படுத்தும் மனிதர்களை மனம் ஏற்க மறுக்கிறது. வரட்சி நிறைந்த வாழ்க்கையின் பசுமைகளில் பிராயாணிப்பதே தனி சுகம். அவ்வாறான உணர்வை தருகிறது பதேர் பாஞ்சாலி.
Be the first to rate this book.