இன்று பதவி என்பது அதிகாரத்தின் அடையாளமாக, புகழாசையாக, பெருமைக்குரியதாக விளங்கி வருகிறது. உலகியல் இன்பங்களில் ஒன்றாக பதவி மோகம் மாறி விட்டது. இதனால் மனிதர்களுக்கிடையில் போட்டி மனப்பான்மை உருவாகி, பொறாமை எண்ணத்தை வளர்க்கிறது. இது மேலும் வெறுப்பு, சண்டை சச்சரவுகள் என்ற பின் விளைவுகளை அதிகரிக்கச் செய்கிறது. இன்று சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு பதவி மோகம், பேராசை, பெருமை போன்ற தீய பண்புகளே காரணமாகத் திகழ்ந்து வருகின்றது.
பதவிமோகம் எதனால் உருவாகிறது என்பதை விளக்கும் நூலாசிரியர் பதவி ஆசை உள்ளவர்கள் பதவிக்கு தகுதியானவர்கள் அல்லர், பதவி தானாகத்தான் வர வேண்டும், மோசடி வழிமுறைகளைப் பயன்படுத்தாமல் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றியே அடைந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
பதவி பெறுவதின் நோக்கத்தில் தெளிவும் நாளை இதற்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வும் இருந்தால் பதவி மீது ஆசை உருவாகாது என்ற சீரிய கருத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடையவும், கலீஃபாக்களுடையவும் வரலாற்றில் இருந்து தக்க சான்றுகளுடன் ஆசிரியர் எடுத்து வைக்கின்றார்.
Be the first to rate this book.