பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எண்ணுவதை இரண்டுவிதமாகச் சுருக்கிவிடலாம். ஒன்று, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எல்லாமே தெரியும்’, இரண்டாவது, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது’. இவை இரண்டும் முழு உண்மையல்ல. நாம் குழந்தைகளாக இருந்தபோது கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. உலகம் முழுவதையும் அவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே அறிந்துகொள்கிறார்கள். தொழில்நுட்ப அறிவிலும் இணையத்தைக் கையாள்வதிலும் நம்மைவிட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். இவை எல்லாமே மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த அறிவு அவர்களை ஆக்கப்பூர்வமாக வழிநடத்துகிறதா, அவர்களது சிந்தனையை வேறுதளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறதா என்பதுதான் இந்த நூல் எழுதப்படக் காரணம். சிறார் குற்றங்கள் தொடர்பாகத் தினமும் ஏதோவொரு செய்தியை நாம் கேள்விப்படுகிறோம். அவற்றை வெறும் செய்தியாக மட்டுமே கடந்துவிடுவது வருங்காலத் தலைமுறைக்கு நாம் இழைக்கும் அநீதி. அதைவிடுத்து நாம் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்கிற வாய்ப்புகளையும் பரிந்துரைகளையும் இந்நூல் முன்வைக்கிறது.
Be the first to rate this book.