பூமி சூடேறுதல்,பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.இப்பிரச்சனை தொடர்பாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஓர் அருமையான கையேடாகத் தந்திருக்கிறார் தோழர் ஜோதி. நூலுக்கு 'பசுமைக்கு உயிர் என்று பெயர் '' என்ற கவித்துவமான தலைப்பையும் கொடுத்துள்ளார்.பசுமைக்குடில்,பசுமை இல்ல விளை - இதன் பொருள் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ளவது நல்லது. விலங்குகள் ,பறவைகள் அழிவது, கடல் வளம், நில வளம்,நீர் வளம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள்,பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் என எதையுமே அவர் விட்டுவிடவில்லை.ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளைக் குப்பைத் தொட்டிகளாகக் கருதிச் செயல்படுவதையும் அதை எதிர்த்துக் குரல்கள் வலுத்து வருவதையும் சுட்டிக்காட்டியும் இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஆக்கவுபூர்வமான பல ஆலோசனைகளை முன்வைத்தும் நூலை நிறைவு செய்துள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Be the first to rate this book.