சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி,கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின் தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்துத் தருகிறது. பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உண்டான தொடர்பை வலுவான முறையிலும் எளிய நடையிலும் விளக்குகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவியலாதது என்று இந்த நூல் உணரவைக்கிறது.
Be the first to rate this book.