பற்கள் நூறாண்டு வாழ என்ற நூல் குறித்து
காலை எழுந்ததும் புகை பிடிக்கும் குச்சியைத் (cigarette) தேடும் நவீன மனிதனின் மனம், வேப்பங் குச்சியையும், வேல மர குச்சியையும் தேடத் தொடங்கிவிட்டால், சுற்றுச்சூழல் ஆரோக்கியமானது மட்டுமின்றி பற்களும் ஆரோக்கியமாகும்.
சூரியன் தனது இமைகளைத் திறக்கும் காலை வேளையில், வேப்ப மரத்திலிருந்து குச்சிகளை உடைத்து, பல் தேய்ப்பதற்கு உகந்த வகையில் அதற்கு வடிவம் கொடுத்து, சுற்றி இருக்கும் மரங்களைப் பார்த்துக் கொண்டே.. அதிலிருந்து உணவுத் தேடி கிளம்பக் காத்திருக்கும் பறவைகளின் குரலோசைகளைக் கேட்டுக்கொண்டே ஒரு முறை கிராமத்து வாசனையில் இயற்கை முறையில் பல் துலக்கி பாருங்கள், இயற்கையின் அழகு புரியும்!
பற்களுக்கென தினமும் காலையும் இரவும் நேரம் ஒதுக்கி நமது நேசத்தை வெளிப்படுத்தினால், பற்களும், நம் மீதான நேசத்தை ஆயுள் முழுவதும் வெளிப்படுத்தும், வலிமையாக!
அதனால் பற்களை நேசிப்போம், முழு மனதுடன்! உறவுகளோடு அதிகம் நேரம் செலவிடாத சூழலில் தான் பலரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அதே நிலைமை தான் பற்களுக்கும்! இனியாவது பற்களைக் காதலிக்கத் தொடுங்குவோம்.
நாம் ஆத்மார்த்த காதலை நூறாண்டுகள் வரை உண்மையாக வெளிப்படுத்துவோம்!
Be the first to rate this book.