மிக நல்லதொரு புனைவு. வெளியிலிருந்து நமக்குத் தெரிந்த பாண்டிச்சேரியின் சித்திரம் ஒன்று. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு பாண்டிச்சேரியை காட்டியிருக்கிறார் எழுத்தாளர்..
இரண்டு மூன்று மணிநேரத்தில் விறுவிறுவென்று வாசிக்கக்கூடிய குழப்பமே இல்லாத நடை. வித்தியாசமான கதைகளம். மூன்று தனித்தனி இழையாக விரியும் கதை அவை ஒன்றுகொன்று மிக அழகாக இணைந்து பின்னலாக மாறியிருப்பது மிகத்தேர்ந்த கதை சொல்லும் முறை..
அரிசங்கரின் சில சிறுகதைகளை வாசித்த போதே, இவரது கதை கரு / களம் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றதே என்று வியந்திருக்கிறேன். அதே வியப்பும் ஆச்சரியம் இந்த புனைவில் கூடியிருக்கிறது..
கதை சொல்லும் முறையில் முன்னர் நடந்ததை பின் கூறி அல்லது பின்னர் நடக்க இருப்பதை முன்னமே சொல்லி அடுத்தடுத்த அத்தியாயங்களை இணைக்கவோ அல்லது நவீன முறையின் கதைசொல்லும் யுத்தியென நினைத்தோ சில விஷயங்களை செய்திருப்பது இதுவரை பிற புனைவுகளில் நான் காணாத ஒன்று..
காட்சி சித்தரிப்புகள், கதாபாத்திர விபரணைகள் எல்லாம் மிக நேர்த்தியாக செய்திருப்பது இந்த நாவலில் மற்றொரு முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். நாவலை வாசித்து முடித்த பின்னர் அசோக், கதிர், ரஃபி, கிரிஸ்டோ போன்ற கதாபத்திரங்கள் நம் முன் உலவி வர அந்த கதாபாத்திர வர்ணனைகள் உதவுகின்றன..
- எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன்
Be the first to rate this book.