தமிழகத்தில் மக்கள் இயக்கங்களோடு கலந்து நின்ற – நிற்கிற – இசைக்குழுக்கள் – பாடகர்கள் – கவிஞர்கள் குறித்த வரலாற்றை இனிமேல்தான் நாம் யாரேனும் எழுத வேண்டியிருக்கிறது. அவ்வரலாற்றில் மதிக்கத்தக்க ஒரு பங்கினை ஆற்றியவராக பரிணாமன் இருப்பார். சந்தக் கவிதைகள் மறைந்து புதுக்கவிதைகள் வந்து சேர்ந்த இடைவெளியில் இசைப்பாடல்களை நம் சமூகம் மறந்து விட்டது போல ஆகிவிட்டது. இசைப்பாடல் என்றால் அது சினிமாப்பாடல் என்றாகிவிட்டது. அதைத் தாண்டி சமூக அக்கறைமிக்க கிளர்ச்சிப் பாடல்களை பரிணாமன் போன்றோர் தொடர்ந்து வழங்கி வருவது முக்கியமானது.
– ச.தமிழ்ச்செல்வன்
Be the first to rate this book.