இப்புதினம் ஒருகாலக்கண்ணாடி என்றால் அதுமிகையன்று. சாதலர்கள் பார்வையில் இது ஒருகாதல் காவியம். வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் இது ஒரு வரலாற்றுப் பதிவு. சமயப் பற்றாளர்களின் பார்வையில் இது ஒரு வழிகாட்டும் நால். கதாநாயகன் ரோஹன் மற்றும் கதாநாயகி குஹியின் மனக்குமுறல்கள், சோகங்கள், ஏக்கங்கள் மற்றும் போராட்டங்கள் - இவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் பாங்கு, நம்மையும் அவர்களோடு சேர்ந்து அவ்வுணர்ச்சி ஓட்டங்களில் ஒன்றிடச் செய்கிறது. இந்துகலாச்சாரம், விழாக்கள், இஸ்லாமியப் பண்டிகைகள் என்று எல்லா வற்றையும் மிகவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். இப்புதினத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்காங்கே கதையின் ஓட்டத்திற்கேற்றவாறு கவிதைகளையும், கிராமியப் பாடல்களையும் இணைத்திருக்கும் அழகு, படிப்பவருக்கு ஓர் ஆனந்த அனுபவத்தைக் கொடுக்கும். நாசிரா ஷர்மா இவர் ஒருபுகழ்பெற்ற எழுத்தாளர் மட்டுமன்றி, பன்முகத் திறமை வாய்ந்தவர். பன்மொழிப் புலவரும் கூட. ஹிந்தி, பார்ஸி, அரபி, உருதுபோன்ற பல மொழிகளும் அறிந்தவர். இவருடைய சிந்தனைகளும் எண்ணங்களும் வேறுபட்ட கலாச்சாரங்களைப் பற்றி எழுதும்போது அதனுள்ளே புகுந்து, காலம் கடந்த உண்மைகளை ஆணித்தரமாக வெளிப்படுத்தியிருப்பது வெகுசிறப்பு. டி. சாய்சுப்புலட்சுமி: இந்நாலை மொழியாக்கம் செய்தவர். இதற்கு முன்பு சாகித்திய அகாதெமியின் "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் பீஷ்ம சாஹ்னியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். எத்திராஜ் பெண்கள் கல்லூாரியில் ஹிந்தித் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல வார, மாதநாளிதழ்களில் வெளியாகி, சிலகதைகள் விருதுகளையும் பெற்றிருக்கின்றன.
Be the first to rate this book.