கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றிய போது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மிகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்தில் கவனத்தைப் பெற்றது.
பெண்மையின் அகப்படாத ரகசிய வியப்புகளை வெளிப்படுத்தும் பலவித முகங்கள் அவரது கதைகளில் துளித்துளியாக நிறைந்துள்ளன. அதிலொன்று பணிவு. அடுத்தது கருணை. வேறொன்று துயரம். மற்றது விலைமகளுக்கானது. இசை, காதல், அன்பு ஆகியவற்றை ஸ்பரிசிக்கப்படாத அனுபவமாக வழங்கும் இக்கதைகள் வாசக மனதை களங்கமின்மையால் நிர்வாணப்படுத்துகின்றன. நவீன காலகட்டத்தின் ஆண்-பெண் உறவில் கலந்த முரண்களின் விவரிப்புகளே இவரின் கதைகள்.
கலை, தத்துவ உலகில் சுற்றிப் பிணைக்கப்பட்ட மரபுகளுக்கு அறைகூவல் விடுத்தன கமலா தாஸின் கதைகள். 1953 முதல் 1984 வரை அவர் எழுதிய நூற்றி நாற்பது கதைகளிலிருந்து படைப்பெழுச்சியின் உச்சத்தைத் தொட்ட தேர்ந்தெடுத்த பதினாறு சிறுகதைகளின் தொகுப்பு இது.
- நிர்மால்யா
Be the first to rate this book.