பத்து வருடங்களுக்கு முன்பு அறிமுகமானபோது பிருந்தா சாரும் அவரது எழுத்தும் தன் நிலையில் இருந்ததாக உணர்ந்தேன். இப்போது அவரும் எழுத்தும் ஜென் நிலைக்கு வந்திருப்பதாக உணர்கிறேன். அற்புதமான உயரத்துக்குப் போய் ஊற்றுக்கண்களைத் திறந்துவிடுகிற நிலை. மௌனம் அதிகமாக அதிகமாக ப்ரியமும் கவிதையும் அடர்த்தியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையை அடையாமல், ‘வானில் பறந்தாலும் பறவையின் நிழல் மண்ணில்தான். நிழலைப் பின்தொடர்கிறேன் நான் எக் கணத்திலும் பறவை என் தோளில் வந்து அமரும் என்ற நம்பிக்கையோடு.’ -என்ற கவிதையை எழுதியிருக்க முடியாது. இம்மாதிரி இத்தொகுப்பின் பல கவிதைகளில் ஜென்னிலும், பறவையின் நிழல் சூஃபியிலும், சங்கத்திலும் ததும்பும் மெடஃபர் தன்மை நிறைந்திருக்கின்றன.
- இயக்குநர் ராஜுமுருகன்
Be the first to rate this book.