எண்பதுகளில் தனது முதல் கவிதைத் தொகுப்பான "காற்றின் பாடல்" மூலம் தமிழ்க் கவிதைப் பரப்பில், தனக்கென ஒரு தனியிடத்தைக் கைப்பற்றிய கவிஞர் சமயவேலின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது.
வாழ்வின் நுண்ணிய தருணங்களில் குமிழியிடும் விளக்கவே முடியாத கவித் தருணங்களை மொழியின் அபூர்வ சொற்களில் சிக்க வைத்து, அவற்றை இதயங்களுக்கு மாற்றுவதே கவிதையின் பிரதானப் பணி எனக் குறிப்பிடுகிறார். மிக எளிய சொற்களின் மூலமே இந்த அதிசயத்தை தனது கவிதைகளில் நடத்திக் காண்பிக்கிறார். கல் இதயங்களையும் தொடும் சொல்முறைகளை இவர் கவிதைகளில் காண்கிறோம்.
கிராமப்புற வாழ்வின் வெள்ளந்தியான மனிதர்களையும், வறண்ட கரிசல் நிலக்காட்சிகளின் அபூர்வ அழகையும் நம் மனம் தொடும் கவிதைகளாக இத்தொகுப்பு முழுவதும் வாசிக்கிறோம். இவரது ஒவ்வொரு தொகுப்பும் ஒரு கவிதா அனுபவத்திற்குள் நம்மை இழுத்து, இயற்கையுடன் கரைக்கும் பேரனுபவத்தை நோக்கி நம்மைச் செலுத்த வல்லவை.
Be the first to rate this book.