சிறகுகளுடன் வலம் வரும் சிநேகிதர்கள் பறவைகள். ஜிவ்வென்று வானத்தில் பறந்து செல்லும் பறவைகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா, ஒவ்வொரு பறவையும் ஒவ்வோர் அதிசியம். பறவைகளின் அதிசிய உலகத்துக்கு இங்களை அழைத்துச் செல்கிறது இந்நூல்.பிற உயிரினங்கள் அனைத்திடம் இருந்தும் வேறுபடுகின்றன பறவைகள். தனியொரு உலகம் அது. வண்ணமயமான உலகமும்கூட. கூடுகள் அமைப்பதில், குஞ்சு பொரிப்பதில், கூடி நட்புக் கொள்வதில் என்று ஒவ்வோர் அம்சத்திலும் பறவைகள் நம்மை கவர்ந்து கொண்டிருக்கின்றன. பறவைகளால் நடக்க முடியும். ஓட முடியும். பறக்க முடியும். தண்ணீரில் நீந்தவும் முடியும். எல்லாப் பறவைகளும் பறக்கக்கூடிவையா? பறவைகள் சைவமா, அசைவமா? எப்படிக் கூடு கட்டுகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பாதை மாறாமல் நீண்ட தூரம் பயணம் செய்வது எப்படி. வேறெங்கும் பெறமுடியாத பரவசத்தைப் பறவைகள் உங்களுக்கு அளிக்கப்போகின்றன.
-க. குணசேகரன்.
Be the first to rate this book.