திரை இசைப்பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந்தக் கலைவடிவத்தை விடவும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுவது திரைப்படங்களே. அதிலும் குறிப்பாக திரை இசைப்பாடல்களே. சினிமா பாடல்களைக் கேட்கும் ஒவ்வொருவரும் அதைத் தன் மனதின் பாடலாக உருமாற்றிக் கொண்டுவிடுகிறார்கள். தமிழ் திரை இசைப்பாடல்கள் உருவாக்கிய பாதிப்பையும் அதன்வழியாக உருவான ரசனையையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் சினிமாவின் கண்டுகொள்ளப்படாத சாதனைகள் குறித்து விரிவாக நமக்கு அடையாளம் காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சினிமா பாடல் என்பது ஒரு மாயக்கண்ணாடி. அது கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப வேறுவேறு தோற்றங்களை உண்டாக்கி காட்டுகின்றன என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.
Be the first to rate this book.