இத்தாலிய நாட்டு வித்தகர் வீரமாமுனிவர் 1710 ஆம் ஆண்டு தமிழகம் வந்தார். அவரது முதல் பணியாக திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்து ஐரோப்பியருக்கு அறிமுகம் செய்தார். கிறித்தவ மரபிலேயே முதல் முறையாக புனித வளனாரை கதாநாயகனாக வைத்து, ‘தேம்பாவணி’ என்ற நீண்ட காப்பியத்தைப் படைத்தார். அன்னை மரியாளை மையம் கொண்ட இரண்டு பாடங்களைப் புனைந்தார் - அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலூர் கலம்பகம். ஆனால் அவர் எழுதிய நூல்களிலெல்லாம் மிகவும் பரவிச் சென்றதும் பல மொழிகளில் இடம் பெற்றதும் அவரது, ‘பரமார்த்த குரு கதை’தான்.
நகைச்சுவையோடு எளிய உரைநடையில் வெளிநாட்டார் வாசித்து தமிழ் கற்க பெரிதும் உதவியது இந்த நூல். பிறகு இக்கதையை அவரே இலத்தீனிலும் மொழிபெயர்த்தார். ஏனெனில் அவரது உரைநடையைப் புரிந்துகொள்ள இலத்தீன் அறிந்த மேலை நாட்டவர்க்கு உதவியாக இருந்தது. 300 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை தமிழ் உலகில் மறு பதிப்பாக வெளிவருவது இந்நூலின் சிறப்பு.
* ஆனந்த் அமலதாஸ், சேச.
Be the first to rate this book.