பறப்பது ஓர் அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப் பற்றியும் அவனுடைய வெற்றியைப் பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்திரங்களின் அமைப்பைப் பற்றியோ அவற்றில் பயன்படும் விஞ்ஞான உண்மைகளைப் பற்றியோ கூறுவது இங்கு நோக்கமல்ல. பறவையைப் பார்த்து மனிதன் தானும் பறக்க முயன்றான். அவன் தனது அறிவின் திறமையால் பறவையை விடப் பல மடங்கு அதிக வேகத்தோடு பறக்கக் கற்றுக்கொண்டான். அவன் செய்த முயற்சிகளைப் பற்றி இந்த நூலில் படித்துப் பாருங்கள்.
Be the first to rate this book.