பட்ட பாடுகளும் படுகின்ற பாடுகளுமான வாழ்க்கைப் பாடுகளையே மனித சமூகம் பண்பாட்டு வெளியாய்க் கட்டமைத்திருக்கிறது. தமிழர் வாழ்வியலோடு பிணைந்திருக்கிற பண்பாட்டுக் கூறுகள் தனித்த அழகியலோடும் அறத்தோடும் அரசியலோடும் புலப்படக் கூடியவை. ஒற்றைப் பண்பாடு அல்லது ஒருமுகப் பண்பாடு என்பதெல்லாம் அதிகாரத்தோடும் அடக்குமுறைகளோடும் தொடர்புடைய சாயலைக் கொண்டிருப்பவை. தமிழ் நிலப் பெருவெளியில் காணலாகும் பண்பாடு என்பதெல்லாம் பன்மைப் பண்பாடுகளின் கூட்டுத் தொகுப்புதான். பண்பாட்டு வெளிகளை அறிதலும் புரிதலும்கூட, மக்கள் வாழ்வியலைக் கற்பதுதான். ஏனெனில், மக்கள்தான் பண்பாட்டை வாழ வைக்கிறார்கள்; தம் வாழ்வையே பண்பாடாய் வடிவமைத்திருக்கிறார்கள். பன்முகப்பட்ட பண்பாட்டுக் கோலங்களைக் குறித்த அறிதலும் புரிதலும் சற்றுக் குறைவாய் நிலவிக்கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில், தமிழரின் பண்பாட்டுத் தனித்துவங்களைக் குறித்த எடுத்துரைப்புகளை முன்வைத்திருக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.