மனித சமூகங்களில் காணப்படும் சமூக நடத்தைகளும் நெறிமுறைகளும் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.
நிகழ்வுகளில் வரம்பை உள்ளடக்கி இருக்கும் அது மனித சமூகங்களில் சமூக ரீதியான கற்றல் மூலம் பரவுகிறது. கலை, இசை, சடங்கு, சமயம், உடை, சமயல், தொழில்நுட்பங்கள், பயன்பாட்டுக் கருவிகள், குடியிருப்பு என பல்வேறு வடிவங்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறது.
இந்த நூலில் பக்தவத்சல பாரதி மானிடவியலின் மையக்கருத்தாக இருக்கும் பண்பாட்டை அறிவியல் பூர்வமாக விளக்குவதற்கு முதலில் மானிடவியலின் தோற்றம் அதன் வளர்ச்சி, உட்பிரிவுகள், ஆய்வுமுறை பற்றி பேசுகிறார். பிறகு அனைத்து சமூகங்களிலும் காணப்படும் பண்பாட்டு பொதுமைகளைப் பற்றி விவரிக்கிறார்.
இதற்காகப் பண்பாடு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் பல்வேறு வடிவங்களை அதன் உட்கூறுகள், அமைப்பு, அணுகுமுறை, படிமலர்ச்சி, பரவல், மாற்றம், சமூக அமைப்புகள், குடும்பம், திருமணம், உறவுமுறை, தொன்மைப் பொருளாதாரம், சமயம், வழிபாடு, இளையோர் கூடங்கள், தொல்குடி அரசு முறைகள் என பல்வேறு தலைப்புகளைக் கொண்டு விவரிக்கிறார்.
இதன் மூலம் வாழ்க்கை முறையாகவும் வாழ்வுக்கான அர்த்த மாகவும் அமையும் பண்பாட்டை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.
தமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்துள்ள முதுசொம் ‘பண்பாட்டு மானிடவியல்’. தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும், எங்களுக்குப் பண்பாடு தொடர்பான தெளிந்த ஞானத்தையும் வழங்குகின்றது இந்நூல்.
-பேரா. கலாநிதி என். சண்முகலிங்கன்
மேனாள் துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
இந்த நூலின் பயன் என்பது அறிவின் பயனாகும்… இந்த நூல் தமிழால் முடியும் என்ற முழக்கத்தை மெய்ப்பிக்கவல்ல ஒரு பெருமிதப் படைப்பாகும்.
-பேரா. இரா. கோதண்டராமன்
தொல்காப்பியர் அடிப்படை ஆய்வு மையம், புதுச்சேரி.
பண்பாட்டு மானிடவியலை மிகச் சிறப்பாகப் புரிந்து கொள்ள உதவும் முதன்மையான நூல்
- தி இந்து, 27. 10. 1992.
Be the first to rate this book.