ஆடற மாட்டை ஆடிக் கற; பாடற மாட்டைப் பாடிக் கற! இது கல்விக்கும் மிகவும் பொருந்தும். ஆடற குழந்தைக்கு ஆடிச் சொல்லிக்கொடு... பாடற குழந்தைக்குப் பாடிச் சொல்லிக் கொடு.
தன்னைப் போலவே தன் மகனும் ஓவியராகத்தான் வரவேண்டும் என்று சச்சின் டெண்டுல்கரின் அப்பா வற்புறுத்தியிருந்தால் இன்று நமக்கு ஒரு மாஸ்டர் பிளாஸ்டர் கிடைத்திருக்கமாட்டார்.
ஒரு மல்லிகைச் செடிக்கு என்னதான் டன் கணக்கில் உரம் போட்டு எக்கச்சக்கமாகப் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து ரோஜாப் பூவைக் கொடு என்று கேட்டால் அந்தச் செடியால் தரவே முடியாது. அதே நேரம் தினமும் சரியாக வெறும் தண்ணீர் ஊற்றி வந்தாலே போதும் அது மல்லிகைப் பூக்களாகப் பூத்துக் குலுங்கும். எதுவும் அதன் இயல்போடு வளரவிடப்பட்டால் உச்சியை எட்டும். இதுதான் வெற்றிக்கான எளிய சூத்திரம்.
நம் குழந்தை அப்படிச் சிறப்பாகப் பரிணமிக்க நாம் என்ன செய்யவேண்டும்?
ஒவ்வொரு மனிதனுக்கும் எட்டுவிதமான அறிவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன? ஒவ்வொரு குழந்தையிடமும் என்னவிதமான அறிவு அதிகமாக இருக்கிறது, அதை எப்படி வளர்த்தெடுக்கலாம் என்பதை ஆசிரியர் நுட்பமாக விவரித்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையை சூப்பர்ஸ்டார் ஆக்குங்கள்.
Be the first to rate this book.