ரகுநாதன் படைத்த நாவல்களுள் மிகவும் புகழ் பெற்றது - ‘பஞ்சும் பசியும்.’ மிகச்சிறந்த பத்து தமிழ் நாவல்கள் என்ற பட்டியலில் தவறாமல் இடம்பெறும் முற்போக்கு நாவல் இது. கமில் ஸ்வலபில் என்ற செக்கோஸ்லாவாகியா நாட்டுத் தமிழறிஞர், இந்நாவலை செக். மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். 1951-ஆம் ஆண்டு வெளியான இந்நாவல், அந்தக் காலத்திலேயே 50,000 பிரதிகள் விற்பனையானது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை, அன்றைய அரசாங்கத்தின் ஜவுளிக்கொள்கை கைத்தறி நெசவுத் தொழிலை எந்த அளவுக்குச் சீரழித்தது, அதிலிருந்து விடுபட அந்த மக்கள் நடத்திய போராட்டங்கள், தனிமனிதர்களின் வாழ்க்கையில் இந்த அவலச்சூழலினால் ஏற்பட்ட சூறாவளிகள் ஆகியவற்றை விவரிக்கிற நாவல் இது.
Be the first to rate this book.