இம்முறையும் சிறார்களது படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்குப் பயணித்தோம். ஒவ்வொரு இடத்திலும் கதைப் பெட்டியின் வழியே படைப்புகளைச் சேகரித்தோம்.
கதை, பாடல், ஓவியங்கள், புதிர் என உங்களது ஒவ்வொரு படைப்பிலும் இயற்கை மீதான அக்கறையும் கவனிப்பும் நிறைந்து இருந்தது. கஜா புயல் அனுபவங்கள், எலி-பூனை விளையாட்டு, சின்னதம்பி யானை, பரிசு தரும் சூரியன், கழுகு ராஜாவுக்கு சட்டை தைக்கும் தையல் சிட்டு என விதவிதமான படைப்புகள் இந்த இதழை அலங்கரித்திருக்கிறது. குறிப்பாக செய்திகளில் "சின்னதம்பி" யானை குறித்து பார்த்து இருப்பீர்கள். யானை வழித்தடங்கள் குறித்த பிரச்சனைகளை ஓர் புதிராக மாற்றி எளிமையாகக் கொடுத்திருக்கிறோம். அதே போல "எலி-பூனை" விளையாட்டையும் அறிமுகம் செய்திருக்கிறோம்.
Be the first to rate this book.