சிறுவர்களின் கற்பனைகளை முதன்மைப் படுத்துதல், வண்ணமயமான வடிவமைப்பு, எளிமையான மொழி, தரமான அச்சிடல், நேர்த்தியான ஓவியங்கள் என பஞ்சு மிட்டாய், சிறார்களின் மகிழ்ச்சியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறது.
சாலையப்பாளையம்,வேலாயுதம்பாளையம், அய்யனார்புரம், தஞ்சாவூர், கோபாலசமுத்திரம்-மன்னார்குடி, திருச்செந்தூர், கோவை, சில்லக்குடி-பெரம்பலுர், சென்னை, பெங்களூர் என வெவ்வேறு ஊர்களிலிருந்து பெறப்பட்ட சிறார் படைப்புகள் இந்த இதழுக்கு பல வண்ணங்களை சேர்த்திருக்கிறது. இயற்கையான சூழலும் அதற்கான தளமும் அமையும் போது சிறார்களின் கற்பனைகள் சிறகடித்து பறப்பதை ஒவ்வொரு படைப்புகளிலும் உணர முடிகிறது.
பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் குறித்து:
குழந்தைகளின் படைப்பூக்கத்தை வளர்த்தெடுப்பதில் முதன்மையான இதழாக பஞ்சுமிட்டாய் இருக்கிறது. குழந்தைக்ளின் ஓவியங்கள் சிறப்பு. பஞ்சுமிட்டாய். ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள்! பஞ்சு மிட்டாய் அத்தனை இனிப்பு!
- உதயசங்கர்
பஞ்சு மிட்டாய் பிப்ரவரி இதழ் புரட்டப் புரட்ட பிரமிப்புதான். பூவும் இலையும், சிங்கமும் சுண்டெலியும் – கதைகளில் வெளிப்படும் குழந்தைகளின் கற்பனை பெரும் ஆச்சர்யத்தைத் தந்தது. குழந்தைகள் மீதான நம் நம்பிக்கை பெருகுகிறது. அன்பென்பது நம்பிக்கைதானே என்று புரிய வைக்கிறது பஞ்சு மிட்டாய்.
Be the first to rate this book.