தலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் – ஒரு பரவசம்.
– ச.மாடசாமி.
இதழின் பெரும்பகுதி சிறுவர்களின் பங்களிகின்றனர். முழுக்க வண்ணத்தில் இருப்பது இதன் பலம். கதை, விளையாட்டு, பாடல், விடுகதை என… சுவை மிகுந்த பகுதிகளால் நிறைந்திருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்துள்ள ஏழாம் இதழோடு சிறுவர்கள் உற்சாகமாக விளையாட ஓர் அழகான இணைப்பும் உள்ளது. சிறு வட்டத்தில் பகிரப்படும் சிறுவர் இதழில் இதுபோன்ற இணைப்பு தருவது ஆச்சர்யமானது; (அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்). நான் எழுதிய கதை ஒன்றும் அழகான ஓவியத்துடன் பிரசுரமாகியிருக்கிறது. வடிவமைப்பு அருமை. ஒவ்வொரு பக்கங்களிலும் வழிந்தோடும் குழந்தைமையை ஏந்திகொள்ளும் புதிய அனுபவத்தைத் தருகிறது. நீங்களும் படித்துப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
- விஷ்ணுபுரம் சரவணன்
யாராக இருந்தாலும் அங்கீகாரம் என்பதை விருபாத மனிதர்கள் பெரும்பாலும் யாருமில்லை எனச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு அவ்வுணர்வு அதிகம் தான். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறுசிறு அங்கீகாரங்கள் அதிலும் குறிப்பாக முதல் அங்கீகாரம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை.
அந்த வகையில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அங்கீகாரங்களை முந்தைய இதழ்களை விட அதிகளவு சுமந்து வந்திருக்கும் பஞ்சு மிட்டாய் இதழ் 7 குழந்தைகள் மற்றும் சிறார் தளங்களில் முக்கியமான முன்னெடுப்பு.
குழந்தைகளுக்கான சிந்தனை ஊக்கம். வாழ்த்துகள் பஞ்சு மிட்டாய் குழுவினர்.
- இனியன்
Be the first to rate this book.