உருவத்தில் குட்டிக் குட்டியான படைப்பாளிகளின் பெரிது பெரிதான கற்பனைகளுடைய உருவகத் தொகுப்பு இந்தப் பஞ்சுமிட்டாய். எல்லைகளற்ற கற்பனைகளைப் போலவே, எல்லையில்லாமல் பரவியிருக்கும் தமிழ் வாழும் இடங்களிலிருந்து தேடி எடுத்த முத்துக்களால் கோர்க்கப்பட்ட சிறு மாலை.
இம்முறை பஞ்சுமிட்டாய் வெவ்வேறு இடங்களிற்கு கதைப்பெட்டியுடன் பயணித்திருக்கிறது.
சென்னை,பெங்களூர்,திருப்பூர்,கோத்தகிரி,கோவை,வேலூர்,கஞ்சம்பாளையம் என வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட சிறார் படைப்புகள் பஞ்சுமிட்டாயை மேலும் இனிக்க வைக்கிறது. சிறார்களின் படைப்புலகத்தை மேலும கவனத்துடன் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.
பிறந்தநாள் விழாவிற்கு வரும் குழந்தைகளுக்கு கையில் இனிப்புடன்,மொழி ஆர்வத்தை ஊக்குவிப்பதற்குக் கொடுக்க கூடிய பரிசாக இருக்கிறது நமது பஞ்சுமிட்டாய் இதழ்.
Be the first to rate this book.