தன்னம்பிக்கை தலைப்பில் தன்னம்பிக்கை தரத்தை 0% முதல் 100% வரை படிப்படியாக பட்டியலிடும் முறையை நம் பள்ளிகளில் அறிமுகம் செய்ய வேண்டும். படைப்பாற்றல் தலைப்பில், நம் குழந்தைகளுக்கு படைப்பாற்றலை வளர்க்க பத்து டிப்ஸ் பகுதியை நாம் ஆசிரியர் பயிற்சியில் சேர்க்க வேண்டும். தேடல் எனும் தலைப்பின்கீழ் தனக்கு இந்திய அரசின் சர்.சி.வி.ராமன் விருது பெற – தான் கண்டுபிடித்த Fluropath கருவி – அனுபவத்தை அவர் பதிவு செய்திருப்பதை கல்லூரிகளின் அறிவியல் துறை தோறும் பாடமாக வைக்க வேண்டும். இந்த நூலில் அவர் எழுதுவதோடு நிற்கவில்லை. உடனடியாக களத்தில் செயலிலும் குதித்திருக்கிறார். கனவு, தன்னம்பிக்கை, படைப்பாற்றல், தேடல், விடாமுயற்சி என அனைத்து தலைப்பிலும் குழந்தைகளின் பல்வகை படைப்பாற்றல் இந்தப் புத்தகம் முழுவதும் மிளிர்வதை நாம் காணலாம்.
மக்கள் விஞ்ஞானி’. அடுத்த தலைமுறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பவர். கலாமின் ஒப்பற்ற சீடர். இருபதுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் உரிமங்கள் பெற்றவர். சி.எஸ்.ஐ.ஆர் எனும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி. கலாமைப் போல நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.
Be the first to rate this book.