பறையன் ஒருவன் அனுமதியில்லாமலும், அதே சமயம் எந்தவிதமான இடையூறும் இல்லாமலும் ஒன்பது வருடங்கள் பயிரிடுகிறான். நிலவரியைத் தவறாது செலுத்தியதற்கான ரசீதுகளையும் அவன் வைத்திருக்கிறான். அவன் துணிவுடன் பட்டாவிற்கு விண்ணப்பிக்கிறான். மிராசுதார் அவனது விண்ணப்பத்தை எதிர்க்கிறார். அதனால் மிராசுதாருக்கு அந்த நிலம் கிடைக்கிறது. பிறகு பறையனிடம் அந்த நிலத்தைக் கொடுக்கிறார். ஆறு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் பட்டாவுக்கு விண்ணப்பிக்க பறையன் முயல்கிறான். இம்முறை பக்கத்து கிராமத்து மிராசுதார் இதை எதிர்க்கிறார். ஆனால் அவருக்கு இதை எதிர்க்க உரிமையில்லை. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது அறுவடைக்குத் தயாராகவுள்ள பறையனுடைய நிலத்தில் மிராசுதாரின் கால்நடைகள் விரட்டப்படுகின்றன. கால்நடைகள் பயிர்களை மிதித்தும், தின்றும் நாசம் செய்கின்றன. நீதிமன்றத்தில் மிக நீண்ட காலத்திற்கு வழக்கு நடக்கின்றது. பயிர்கள் நாசமாக்கப்பட்டதற்கான இழப்பீட்டை பறையன் பெறுகிறான். ஆனால் மிராசுதாருக்குப் பட்டா கிடைக்கிறது. பதினைந்து வருடங்கள் பயன்படுத்திய நிலத்திலிருந்து பறையன் தூக்கி எறியப்படுகிறான். பறையனுக்கு போரிடும் அளவிற்கு புத்திக்கூர்மையோ, அல்லது பணபலமோ இல்லை. நீதியை அடைவது என்பது அவனால் முடியாது.
- நூலிலிருந்து...
Be the first to rate this book.