யாழ்ப்பாண சமூகத்தில் புரையோடியுள்ள சாதிப்படிநிளைகளின் பின்புலத்தை நுட்பமாகச் சொல்லும் இந்நாவல், அடக்குமுறைக்குட்பட்ட பஞ்சமர் மக்களுடன் வாழ்ந்து பெற்ற அசலான அனுபவத்தின் வெளிப்பாடு. உழைக்கும் வர்க்கத்தின்மேல் சுமத்தப்பட்டுள்ள நுகத்தடிகளை உடைத்தெறிந்து எல்லோருக்குமான விடுதளைக்காக இலக்கியத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் டானியலின் வேட்கை இதன் அழகியலைத் தீர்மானித்துள்ளது. இன்று தேசிய இனப் பிரச்சினையில் மூடிமறைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணத்தில் கனன்று கொண்டிருக்கும் சாதீய நெருப்பின் முதல் பதிவான இந்நாவல், ஈழ வாழ்புலச் சிக்கல்களை மேலும் புரிந்துகொள்வதற்குப் புதிய வெளிச்சத்தை அளிக்கிறது.
Be the first to rate this book.