பலநூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் கேட்டும் பார்த்தும் வாசித்தும் கற்பனையில் சேர்த்து வைத்திருந்த போர்களுக்கும் அதன் வன்முறைகளுக்கும் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் நேரடி சாட்சியாக இருந்து அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள். செல்வம் அருளானந்தத்தின் தனிக்குரலில் அவர்களின் ஒட்டுமொத்தத் துயரமும் வெளிப்படுகிறது. இலட்சியம், தியாகம், விடுதலை ஆகிய சொற்கள் இவரது மொழியில் புதிய அர்த்தங்களைப் பெறுகின்றன. செல்வம் தன்னுடைய அனுபவங்களைப் புகாரோ குற்றச்சாட்டோ பொருமலோ இன்றிப் பகடியாகவும் எதையும் துறக்க முடியாத துறவியின் பாவனையிலும் எழுதிச் செல்கிறார். இது அவரின் மூன்றாவது அனுபவப் புனைவு நூல்.
Be the first to rate this book.