தமிழில் கடல் சார்ந்தும், கடலைப் பற்றியும், கடலோர மக்களின் வாழ்வியலையும் அறிந்துகொள்ள முற்படுகையில் அங்குள்ள வாழ்வியலை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அளவிற்கு நம்மிடம் உள்ள நூல்கள் சொற்பமே. அப்படிப்பட்ட நூல்களில் துறைவன் நாவலும் ஒன்று.
துறைவன் நாவலை தொடர்ந்து எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆன்றணி எழுதியிருக்கும் ‘பனிக்கடல்’ என்னும் இப்புத்தகம், மீனவ சமுதாய மக்களையும் அவர்களது வாழ்வியலையும் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் நாம் உணர்ந்துகொள்ளும் அளவிற்கு தெளிவாக தனது எழுத்துகள் மூலம் அளித்திருக்கிறார்.
இந்தச் சிறுகதைகள் இதுவரை நாம் சந்தித்திராத பல புதிய அனுபவங்களையும் கடலின் மீதான நமது பார்வையையும் மீனவ மக்களின் மீதான கண்ணோட்டத்தையும் மாற்றி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Be the first to rate this book.