பண்டைய இந்திய சமூகத்தின் பொருளியல் அடித்தளமும் அதன் மீதமைந்த மேற்கட்டுமானமும் பற்றி புரிந்துகொள்ள ஆர்.எஸ்.சர்மா அவர்களால் எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளின் தொகுப்பான “பண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம்” என்ற இந்த நூல் மிகவும் முக்கியமானதாகும். இதன் நோக்கம், இந்திய வரலாற்றை சரியாக புரிந்துகொள்ளும் போதுதான் இந்த சமூகத்தை மாற்ற முடியும் என்பதே. அதற்கான தொடக்கமாக இந்நூல் புதுமைப் பதிப்பகத்தால் வெளியிடப்படுவது மகிழ்ச்சியானதே. தமிழில் இது போன்ற ஆய்வு நூல்களை அதிகமாக கொண்டுவருவதற்கான முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
Be the first to rate this book.