திரு.ஆர்.எஸ்.சர்மா பாட்னா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற வரலாற்றுப் பேராசிரியர். இதன் முன்னர் டோரன்டோ மற்று டில்லி பல்கலைகழகங்களில் மிகச் சிறப்பான முறையில் வரலாற்று பாடம் போதித்துப் பெரும் புகழ் பெற்றவர். இந்திய வரலற்று ஆரய்ச்சிகழகத்தின் முதல் தலைவராக திகழ்ந்த நற்பெருமையும் இவரையே சேரும். “பண்டைகால இந்தியா” என்பது அவரது பேன முனையிலிருந்து உதித்த மிகவும் புகழ் பெற்ற நூல். பிரபல இந்திய வரலாற்று அறிஞர்களால் ,ஆன்றோர்களால் , சான்றோர்களால் பெரிதும் போற்றி பாராட்டப்பட்ட இந்த அறிய நூலுக்கு அளிக்க பட்டிருந்த அங்கிகாரத்தை இந்திய அரசு 1977 இல் திரும்பப் பெற்று கொண்டுவிட்டது. எனினும் தவறு உணரப்பட்டு,1980ஆம் ஆண்டில் அந்த அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
Be the first to rate this book.