"... ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரிய வருகைக்குப் பிற்பட்ட மூவேந்தரின் பேதைமையாலும், பல்வகைப்பட்ட கொண்டான்மாரின் (வையாபுரிகளின்) காட்டிக் கொடுப்பாலும், தமிழ் நாகரிகம் மேனாட்டார்க்குத் தெரிந்த அளவுகூடத் தமிழர்க்குத் தெரியாது மறையுண்டு கிடக்கின்றது. இவ்விரங்கத் தக்க நிலைமை தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாயிருத்தலால், இதை நீக்குதற் பொருட்டு இந்நூலை எழுதத்துணிந்தேன். இற்றைத் தமிழருள் நூற்றிற் கெண்பதின்மர் தற்குறிகளும் தாய்மொழி யுணர்ச்சி யில்லாதவருமாயிருப்பினும், புதுத் தலைமுறையாக முளைவிட்டுக் கிளர்ந்தெழும் தமிழ் மாணவ மணிகளேனும், இதைக் கருத்தூன்றிப் படித்துத் தம் முன்னோரின் நாகரிகப் பண்பாட்டைப் புதுக்கிப் போற்றிக் காப்பாராக."
- ஞா.தேவநேயப் பாவாணர்
Be the first to rate this book.