’பண்பாட்டின் வாழ்வியல்’ தமிழர்தம் நெடிய வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த சடங்குகள், வழிபாடு, திருவிழாக்கள், உணவு, விளையாட்டு, வீடு இன்னபிறவற்றைப் பற்றிய காத்திரமான ஆய்வுகளையும் புதிய பல தரவுகளையும் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களால் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
மஞ்சள் மகிமை, கோலம், மாலை, உணவும் குறியீடுகளும், தாலியின் சரித்திரம், பல்லாங்குழி, சடங்கியல் வாழ்வு, பெண் எனும் சுமைதாங்கி ஆகியவை உள்ளிட்ட 29 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்களையும் அதன் எச்சங்களையும் பேசும் இக்கட்டுரைகள் அவற்றால் உண்டான வாழ்வியல் அசைவுகளையும் சேர்த்தே பேசுகின்றன.
Be the first to rate this book.