தங்கத்தை மையப்படுத்திய பணவியல் முறையானது பல நூற்றாண்டுகளாகச் செயல்பட்டு வந்ததால் தங்கத்திற்கோ தங்கத்தை மையப்படுத்திய தர உறுதிப்படுத்தலிற்கோ திரும்புவதுதான் பாதுகாப்பானதாகவும் சரியான தேர்ந்தெடுப்பாகவும் இருக்குமென்று பலரும் வாதிடுகிறார்கள். ஆனால் நவீன காலத்தில் தங்கத்தை வைத்து பரிவர்த்தனை செய்வதே சாத்தியமற்றதாக உள்ளது.இம்முறையானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சாத்தியமற்றதாக இருந்ததால்தான் தங்கத்தை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்ற முறையானது வளர்ச்சியடைந்தது.
நடைமுறையில், தங்கத்திற்கு மாறாகத் தங்கத்தை வழங்குவதாக அளிக்கப்படும் வாக்குறுதிகளாலேயே இன்றைய பரிவர்த்தனைகள் நடந்தேற முடியும் என்பது இயல்பானதாக உள்ளது.எனவே தங்கப்பணத்தை வழங்குவதாக அளிக்கப்படுகின்ற வாக்குறுதிகளுக்கும், பொதுவாக அளிக்கப்படுகின்ற வாக்குறுதிகளுக்கும் என்ன வேறுபாடு? எனவே உண்மையில் இவ்வமைப்பை இயங்க வைப்பது தங்கமல்ல மாறாக வாக்குறுதிகளின் மீதான நம்பகத்தன்மையே.அவை நம்பகத்தன்மையான வாக்குறுதிகளாக இருக்குமா?
இருக்கலாம். ஆனால் தங்கத்தை திருப்பித் தருமாறு கேட்டு வருபவர்கள் அரிதாகவே இருப்பார்கள் என்ற பழங்கால பொற்கொல்லன் நடத்தி வந்த வங்கி அமைப்பில் இருந்த வாக்குறுதிகளைப் போன்றே நாம் பணமாகப் பயன்படுத்துவதும் இருக்கும். இதுதான் பொற்கொல்லனின் சூழ்நிலையிலும் சிக்கலாக இருந்தது. உண்மையான தங்கமானது எவர் ஒருவராலும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே இல்லாத தங்கத்தைக் கொண்டு மேலும் மேலும் பணத்தை உருவாக்கிப் பயன்படுத்தும் ஏமாற்று முறைக்கு இது வழிகோலியது. அதே இயல்புகள் அதே இடத்தில் இப்போதும் இருக்கிறபோது வரலாற்றில் அதே நிகழ்வு ஏன் திரும்ப நடக்கக்கூடாது?
-நூலிலிருந்து
இந்நூலின் ஆசிரியர் பால் கிரிக்னன் வெறும் வியாக்கியான பண்டிதர் அல்லர்; அமெரிக்க வங்கிமுறையின் ஏமாற்றுதனத்தை வெளிச்ச மிட்டு வருபவர்; நமக்கான மாற்றை நாமே உருவாக்க வேண்டும் என்று முனைந்து உழைத்து வருபவர்.
Be the first to rate this book.