இயற்கையோடு மனிதன் கொண்ட உறவும் வாழ்ந்த வாழ்க்கையும் தான் தன்வரலாறாக உருப்பெற்றிருக்கிறது. புறஉலகின் நுட்பங்களும், தொழில்நுட்பங்களும், வியாபாரத்தின் பொருட்டு கால்நடையாக இவன் நடந்த ஊர்களும், எதிர்க்காற்றில் சைக்கிளில் அலைந்த அலைச்சல்களும் அவனின் வாழ்வை பொருள் உள்ளதாக ஆக்கியிருக்கிறது. இது ஒரு மனிதனின் கதையல்ல. ஒரு சமூகத்தின் கதை. நேற்றைய மனிதர்களின் கதை. இன்றைய மனிதர்களின் ஆணிவேரை அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நாவல்.
1940களுக்குப் பின் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுக் கிடந்த நாடார் சமூகம் பொருளாதார ரீதியில் எப்படி முன்னேறியது என்பதற்கு இந்தப் பனை விடிலி ஓர் ஆவணம்.
- வேணுகோபால்
Be the first to rate this book.