தொழில் செய்பவர்கள்தான் கோடீஸ்வரராகலாம் என்பது அந்தக் காலம். மாதச் சம்பளக்காரர்களாயிருந்தாலும் பணத்தைச் சரியாக நிர்வகிக்க அவர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்களும் நாளைக்கு ஒரு கோடீஸ்வரர்தான். அதனால்... நீங்கள் இதுவரைக் கேள்விபட்டிராத ஓர் ஒழுக்கம் பற்றி, பண ஒழுக்கம் பற்றி இந்த நூலில் சொல்லி இருக்கிறோம்.
நாங்கள் சொல்வது நேர்மையான வழி. நிம்மதியான வழியும்கூட. பணம் சேர்ப்பது என்பது அப்படியொன்றும் மாபெரும் கடினமான பணி அல்ல. இதற்கு நீங்கள் பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டியது இல்லை.
இந்த நூல் சொல்லும் வழியில் சென்றால் நீங்கள் நினைத்ததை அடையலாம். எல்லோருடைய ஆசையும் பணக்காரராக வேண்டும் என்பதாக இருந்தாலும் பெரும்பாலோர் பணத்தை நேர்மையான வழியில் அடைய வேண்டும் என்று நினைப்பதில்லை. தங்கள் வாழ்நாள் முழுவதும் பணத்தைச் சம்பாதிக்கவும் அப்படிச் சம்பாதித்துச் சேர்த்த பணத்தைச் சேமிக்கவும் தெரியாமல் வறுமையில் உழல்பவர்கள் நிறையப் பேர்.
இவர்களுக்குப் பணம் ஓர் எட்டாக்கனி. ஆனால் சிலர் மட்டும் தாங்கள் விரும்பிய பணத்தை எப்பாடுபட்டாவது சேர்த்து விடுவார்கள். அவர்களுக்கு மட்டும் அது சாத்தியமாகிறது என்கிறபோது உங்களுக்கும் அது சாத்தியமானதுதான். எல்லாருக்கும்தான் பணம் தேவைப்படுகிறது. அதுவும் கொஞ்சமாக இல்லை. ஏராளமாக..
Be the first to rate this book.