தக்காளி தனக்குத் தானே வச்சிக்கிட்ட பேருடா பம்பழாபம்..பள்ளிக் கூடத்தில மாணவ மாணவியர் ஆள் ஆளுக்கு ஏதாவது ஒரு காய்கறி, பழம் பற்றி அது எங்கே இருந்து நம்ம நாட்டுக்கு வந்தது, அதோட ஆங்கிலப் பேர் என்ன, தமிழ்ப் பேர் என்ன, அதில் என்ன சத்து, உடலுக்கு எவ்வளவு கலோரி வெப்பம் தேவை, அதுக்கு என்னென்ன சாப்பிடணும், எது ஆரோக்கியமான உணவுன்னு வரைபடம், பட்டியல் எல்லாம் போட்டுக் கலக்கிட்டாங்கடா..எங்க தாத்தா வீட்டுல அந்தக் காலத்து லிப்கோ டிக்ஷனரி, அப்புறம் ஏதேதோ புத்தங்களில் பார்த்த ஞாபகம். சாந்தன் இணையதளத்தில் இருந்து எடுத்து வகை வகையான பூ, பழம், காய், மீன்கள் எல்லாவற்றுக்கும் தமிழ் அருஞ்சொற்கள் பட்டியல் வேற போட்டிருக்காங்கடா….அருமை. அருமை.
Be the first to rate this book.