கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்டு. எல்லா மதங்களும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அறிவியல் மட்டுமே சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அறிவியல் மட்டுமே சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. உண்மையைத் தேடிப் பயணிக்கிறது…! என்றாவது ஒரு நாள்… அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் காற்றைப் போல், ஒளியைப் போல் நம்மை சூழ்ந்துள்ளன. பெற்றோர்களே… ஆசிரியர்களே… நீங்கள் படித்து குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய உண்மையான ‘பல்லி பலனை’ பேசும் முதல் நூலிது.
Be the first to rate this book.