புத்தகம் பேசுது இதழில் அவ்வப்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. மெக்காலே உருவாக்கிய ஆங்கில மனோபாவக் கல்வி இந்தக் தலைமுறை வரை தொடர்ந்து பெரும் தளர்ச்சியைக் கல்வித்துறையில் உருவாக்கியது ஒரு புறம். கல்வி வணிக மயமானது மறுபுறம். இவற்றுடன் சமச்சீர் கல்வி ஏற்படுத்திய அதிர்வலைகள், அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை, மாணவர்களை ஆசிரியர்கள் அணுகும் போக்கு, மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு அடிப்படைப் பிரச்சனைகள் என இந்நூலில் கல்வியாளர்களும், கல்வித்துறை ஆர்வலர்களும் கரங்கோர்த்துக்கொண்டு தங்கள் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் விரிவாகப் பேசுவது எதிர்கால கல்வித்துறையில் நிகழவுள்ள மாற்றங்களுக்கு அச்சாரம் போன்றதாகும்.
Be the first to rate this book.