உங்கள் குழந்தைகளுக்கு காமிக்ஸ் வடிவில் பல்லவ வரலாற்றை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா?
எனில் உங்களுக்காகவே 10 பாகங்களில் பல்லவ மன்னர்களின் வரலாறு சித்திரக் கதையாக வந்திருக்கிறது.
மொத்தம் 11 மன்னர்கள். ஆதாரங்களுடன் அவர்களது சரித்திரம். ம்ஹும் கற்பனைக் கதையல்ல. அரசர்களின் வரலாறு.
ஒவ்வொரு பாகமும் 32 பக்கங்கள். அளவு: A 4 Size. ஒவ்வொரு பாகத்தின் விலையும் ரூ.90/-
சரித்திர நாவலாசிரியர் உதயணன் நேர்த்தியாகவும் சுருக்கமாகவும் முழுமையாகவும் ஒவ்வொரு மன்னரின் வாழ்க்கையையும் காட்சிகளாக பிரிக்க…
ஓவியர் தமிழ், தன் தூரிகையால் அதற்கு உயிர்கொடுத்திருக்கிறார்.
கெளரா பதிப்பக குழுமம் அட்டகாசமாக கண்ணில் ஒற்றிக் கொள்ளும் வகையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
பல்லவ மன்னர்கள் குறித்த இந்த அறிமுகம், குழந்தைகளின் கற்பனை வளத்தை விரிவுப்படுத்தும். வரலாறு குறித்து அவர்களை தேட வைக்கும்.
Be the first to rate this book.