இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாμண குமாஸ்தாவாக இருப்பான் - வீட்டிலே ஏழு குழந்தைகளும் அவைகளின் தாயும் பட்டினியாக இருப்பார்கள். ஆனால் அவனுக்கு வெறும் பெண் மட்டும் போதாது. வேஷம் போட்ட பெண் வேணும். வெளிவேஷத்துடன் உள்பூச்சும் தேவை. சாதாμணமாகத் தீங்கு, தீது என்று தெரிந்ததை நெருங்கப் பயப்படுபவன் இந்தப் பலிபீடத்தில் தீங்கையும், தீமையையும் விரும்புகிறான். செயற்கை குணாதிசயங்களும் மற்றும் செய்கைகளும் அவனுக்கு அவசியமாகிவிடுகிறது.
5 மைல்கல் நாவல்
இன்று வரை வேசைகளின் உலகம் பற்றி இந்த நாவல் போல் பேசியது வெகு சிலவே என்று அடித்து கூறலாம். இறுதியில் வரும் அந்த உரையாடல் தன்னிகரற்றது. ஏன் இதன் மற்ற இரண்டு பாகங்கள் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை என்று தெரியவில்லை. புதுமைப்பித்தனுக்கு நன்றிகள்.
Surendran R 04-09-2020 04:34 pm