உலக மக்களில் பெரும்பாலோர் பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்னைப் பற்றி சரியாக அறியாமல் உள்ளனர் (அல்லது) தவறாகப் புரிந்துள்ளனர்.
முதலில் வரலாற்றைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அதுவும் ஆதாரப்பூர்வமான நடுநிலையாக எழுதப்பட்ட மூலத்திலிருந்து தெரியவேண்டும்.
உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல் நியாயம், தர்மம், பக்கச்சார்பின்மை ஆகியவற்றின் அடிப்படையில் அணுகினால் உண்மை புலப்படும். உண்மை புலப்பட்டால் நீதி யார் பக்கம் என்பது தெரியவரும்.
இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலை இது என்ற போதிலும் ஊடகங்கள் உண்மைச் செய்தி களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவில்லை. போலியான, தவறான செய்திகள் தான் அதிக அளவில் பரப்பப்படுகின்றன.
இச்சூழலில்தான் ஆதாரப்பூர்வமான வரலாற்று உண்மைகளை நூலாசிரியர் தனக்கே உரிய பாணியில் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
Be the first to rate this book.