மனிதன் பதிப்பகம் கொண்டு வந்துள்ள "பாலஸ்தீனம்: களவாடப்பட்ட தாயகம் " என்ற வெளியீடு, நடைபெறும் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரையும் அதன் வரலாற்று பின்னணிகளையும் முழுமையாக புரிந்து கொள்ள உதவுகிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதால், பாலஸ்தீன மக்களின் நிலத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் வல்லரசாக தோற்றம் எடுத்த அமெரிக்கா, அதே நோக்கங்களுக்காக, தனது ஏராளமான ராணுவ நிதி - தொழில்நுட்ப உதவி மூலம் இஸ்ரேலை மத்திய கிழக்கின் பேட்டை ரவுடியாக வளர்த்தது. மறுபுறம், பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமான ஆக்கிரமிப்பை இன்றுவரை காத்து வருகிறது. ஏகாதிபத்திய நலனில் இருந்து சட்ட விரோதமாக உருவான இஸ்ரேல், இன்று மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனர்கள் ஒரு அரசை உருவாக்கிக் கொள்வதை கூட தடுப்பதோடு, மனித மாண்புகளுக்கு எதிரான கொடூரமான இனவெறி ஆட்சியையும், இன அழிப்பையும் நடத்தி வருகிறது.
44 பக்கத்தில் பாலஸ்தீனம் களவாடப்பட்டதின் வரலாற்று பின்னணியை முழுமையாக கொண்டு வர முயற்சித்துள்ளார் அறிவொளி.
Be the first to rate this book.