தைமூர் ரஹ்மான் ஒரு பாகிஸ்தானிய கல்வியாளர், இசைக் கலைஞர் மற்றும் சோசலிச அரசியல் ஆர்வலர். இவர் பாகிஸ்தானின் மஸ்தூர் கிசான் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர் முன்னணி கித்தார் கலைஞராகவும், லால் என்ற முற்போக்கான இசைக் குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். இவர் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்.
இந்தப் புத்தகம் ஆசியமுறை முதலாளித்துவக் கருத்தாக்கத்தை சமகாலப் பாகிஸ்தானில் மேலாதிக்கத்திலுள்ள விவசாய உறவுகளைக் குறித்த அனுபவ ஆய்வின் மூலம் பரிசீலிக்கிறது. விவசாயத்தில் கூலி உழைப்பு இருக்கிறது, ஆனால் மேலாதிக்கத்தில் இல்லை என்பதைச் சான்றுடன் தெரிவிக்கிறது. அதற்குப் பதிலாக ஆசியமுறைத் தொழிலாளர் உறவுகளின் பல்வேறு வடிவங்கள் மேலாதிக்கத்தில் இருந்து வருகின்றன. அதேநேரத்தில், கடந்த அறுபது ஆண்டுகளில் நிலஉடமை ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருவது விவசாய வர்க்கத்தில் வேறுபாடு தொடர்வதைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் குத்தகை விவசாயத்திலிருந்து விலகி, நில உரிமையாளர்கள் விவசாயத்தை நோக்கிச் செல்லும் போக்கும் இருக்கிறது. இந்த வடிவங்கள், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்தச் சட்டகத்திற்குள் முதலாளித்துவத்திற்கு முந்தைய உறவுகள் தொடர்ந்து நிலவுவதைச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிகிறது.
Be the first to rate this book.