மனிதர்களின் வெறித்தாண்டவம் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் பின்னணியில், பஞ்சாபில் ஒரு கிராம்ம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரியல். அதில் எண்ணற்ற இந்து, சீக்கியப் பிணங்கள்.
பழிக்குப் பழியா? பாகிஸ்தானுக்குப் புலம் பெயரும் முஸ்லிம்கள் அடங்கிய ரயிலுக்கு என்ன ஆகப்போகிறது? அதுதான் கதை.
இந்தக் கதைக்கு இடையில் ஒரு மென்மையான காதல், அரசியல்மீதான ஆழமான பார்வை, சீக்கிய மதத்தைப் பற்றிய விமரிசனம், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் பற்றிய குத்தல், காவல்துறை மீதான கருத்துகள் என்று எண்ணற்ற சித்தரங்களை வரைந்து சொல்கிறார் குஷ்வந்த் சிங்.
Be the first to rate this book.